நடைபெற இருக்கின்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 224 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைவரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் திரு.வசீகரன் அவர்கள் நட்சத்திர பேச்சாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

தமிழர்கள் வாழும் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த 23,24,25,26, 27 ஆகிய தேதிகளில் பெங்களூர் நகரில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான கே.ஆர்.புரம் ஜெயநகர், பி.டி.எம், காந்திநகர், சர்வாகனா நகர், சி.வி ராமன் நகர்,சிவாஜி நகர் ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்தார்.

அப்போது ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா மேரி, மத்திய சென்னை மாவட்டத்தலைவர் ஆரிப், வடசென்னை மாவட்ட செயலாளர் சோபியா, வடசென்னை மாவட்ட இணை செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் தமிழ்நாடு முழுவதிலும் மிருந்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் தொண்டர்கள் கர்நாடக முழுவதும் சென்று ஆம் ஆத்மி கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

