தற்போதைய சூழலில் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ துறை சார்ந்தோர், சுகாதார பணியாளர்கள் என பல்வேறு துறையினரோடு சேர்ந்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என தன்னலம் கருதாது சமூக பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதை சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தற்போதைய சூழலில் பலர் தன்னால் இயலாத சூழலிலும் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். அதில் புகைபடம் எடுத்து சுய விளம்பரம் தேடுவதாகவும் சர்ச்சை நிலவி வருகிறது.

அது குறித்து சரியான தகவலை அறிய ” யூகம் நியூஸ்” களம் கண்டது :
மனித உரிமை ஆர்வலர் மற்றும் சோஷியல் புரோடக்ஷன் தலைவர் ஜோசப் இளந்தென்றலிடம் இது குறித்து கேட்டபோது :
“இதற்கு பதிலோ, கருத்தோ சொல்ல எனக்கு உரிமை இருக்கா என்று தெரியவில்லை இதுவரை சமூக வலைதளத்தில் எங்கள் அமைப்பு விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கம் சார்ந்த பதிவுகளை மட்டுமே பதிவிட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் நாங்கள் செய்த உதவிகளை பதிவிட்டோம் அதற்கு காரணம் தற்போது பொருளாதார ரீதியிலான சிக்கலில் ஏற்ற தாழ்வின்றி அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி செய்யும் போது ஊக்குவிப்பாக இருக்குமே என நாங்களும் பதிவிட்டோம். பின்பு பதிவிட வேண்டாம் என நினைத்தோம்.
ஆனால் அறக்கட்டளை என்பதால் ஆவணப்படுத்துவது எங்கள் பணி அதனால் ஒரிரு படங்கள் அவர்களது அனுமதியோடு எடுத்து அதையும் முகத்தை மறைத்து பதிவிட அரம்பித்தோம். என கூறி முடித்தார்.
நாங்கள் மீண்டும் சில கேள்விகளை முன் வைத்தோம்:
விமர்சனம் செய்பவர்களை பற்றி தங்கள் கருத்து?
அவர்களை விமர்சகர்கள் என குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது;
அவர்கள் நம் நலம் விரும்பிகள், ஆலோசகர்கள், உதவுகிறோம் என்ற பெயரில் ஆர்வகோளாறில் நான் யாருக்கும் காயத்தை அளித்துவிடகூடாதல்லவா? அவர்கள் நம்மை செதுக்கி சீர்ப்படுத்துபவர்கள். அந்த புகைபடம் வைரலாகவிட்டால் நான்கூட தவறிழைத்திருப்பேன்.
உங்களை அந்த விமர்சனம் பாதித்ததா?
பாதிக்கவில்லை சீர்படுத்தியது.
மற்றவர்களை இதை பின்பற்ற வலியுறுத்துவீர்களா?
அது அவர்கள் மனநிலை பொறுத்தது சார். ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு விதிமுறை இருக்கும் ஒரு பாணி இருக்கும். அது அவர்களது சுதந்திரம்
சமூக பணி ஏதும் செய்யாமல் குறை கூறுவது சரியா?
அதை பொதுமக்களும், ஊடகமும் சரி செய்யட்டும் சார். இதனால் எங்கள் பணி 2020 குடும்பங்களை நோக்கி பயணித்து கொண்டிருக்கும். மறுபடியும் சொல்கிறேன்
விமர்சனம் பல தருணங்களில் என்னை சீர்செய்திருக்கிறது அது அவசியமே என தொடர் சமூக பணியிலும் அன்போடு பேசி முடித்தார் ஜோசப் இளந்தென்றல் ……..
(யுகம் நியூஸ்)
