ஆதரவற்றோர் காப்பகத்தில் மிக எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய சமூக சேவகர் ஹனி பிரதர்!

சென்னை : ஜூலை, 07

கொரோனா தொற்று ஊரங்கால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர். – இதனை கருத்தில் கொண்டு லீ பிரஸ் கிளப் தலைவர் மற்றும் மெல்லிசை மேடைக்கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகியுமான சமூக சேவகர் ஹனி பிரதர் அவர்களின் பிறந்த நாள் விழா அயனாவரத்திலுள்ள
நம்மாழ்வார்பேட்டை சந்தியாராயப்பர் தெருவில் உள்ள சமர்பணா ஆதவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஹனி பிரதர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.