பெரம்பூர் : ஆக,01
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிப்பவர் இளையராம் சேகர் என்கிற இளயா என்கிற 25 வயது இளைஞர்.இவர் பெரம்பூரில் உள்ள கல்கி அரங்கநாதன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 7 ஆண்டுகளாக ரூபிக் கன சதுர புதிர் விளையாட்டில் உலக அளவில் இதுவரை நான்கு கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.தற்போது இரண்டு வருடங்களாக முழுமையான பயிற்சிகளை மேற்கொண்டு ஐந்தாவதாக கின்னஸ் உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் நா அமெரிக்காவை சேர்ந்த அந்தோணி புரூக்ஸ் என்பவர் ஒரே மூச்சில் நீருக்குள் மூழ்கியவாறு 5 ரூபிக் கன சதுர புதிருக்கு தீர்வு கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தார் தற்போது அந்த உலக சாதனைக்கு பயிற்சி மேற்கொண்டு அதனை முறியடித்துள்ளார்

சுமார் ஆறு வருடங்கள் வரை எவரும் முயற்சிக்காத இந்த சாதனையை 6 ரூபிக் கன சதுர புதிருக்கு சுமார் 2 நிமிடம் 17 வினாடி(2.17) ஒரே மூச்சில் நீர் நிரப்பிய தொட்டியில் அமர்ந்து மூழ்கியவாறு அதற்கான தீர்வு கண்டுபிடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இதோ இந்த சாதனையாளரின் தொடர்பு எண்:

திரு.இளயா

செல்: 90 87 68 80 49

இவருக்கு ஒரு வாழ்த்து சொல்வோமே…