சென்னை:பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இப்பயிற்சி மையத்தில் படித்து நிறைவு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தனர்.


இந்நிகழ்ச்சியில் பாத்திமா கண் மருத்துவமனை இயக்குனர் சேக் அமத் , பயிற்சி மையத்தின் இயக்குனர் அதிக்சேக் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் திறளாக கலந்து கொண்டனர்.