சென்னை:மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட எழும்பூர் சர்க்கிள் சார்பில் ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் விசாரணை என்கிற பெயரில் பழிவாங்கும் மத்திய பா. ஜ.க அரசை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்
தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்களின் ஆனணக்கிணற்ங்க,மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் ஆலோசனைப்படி,

மத்திய பா.ஜ.கவின் மோடி அரசு பழிவாங்கும் வகையில் அமலாக்கத்துறை ராகுல்காந்தி அவர்களிடம் நடத்தி வரும் விசாரணையை கண்டித்தும்,
அமைதியான முறையில் ஆர்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது காவல் துறை நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்தும்,
எழும்பூர் தொகுதி சர்க்கிள் தலைவர் எம். டி.சூர்யா அவர்கள் தலைமையில் சூளை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் நடைப்பெற்றது.

சர்க்கிள் தலைவர்களான வழக்கறிஞர் சி. பி. நரேஷ்குமார் மற்றும் ஏ.ஜாபர் ஆகியோர் ஏற்பாட்டில், எழும்பூர் தொகுதி வட்டத் தலைவர்களான டி.ஏ.செல்வம், ஜே. குபேந்திரன், கே.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்களான சுரேஷ் பாபு, அன்பழகன், சேத்துப்பட்டு ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டு கண்டண உரையாற்றினர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர் சுமதி புத்தநேசன், காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், சூளை.ராமலிங்கம்,மத்திய சென்னை மேற்கு மாவட்ட கலைப்பிரிவு மாவட்டத்தலைவர் சந்திரசேகர்,எழும்பூர் பகுதி மகளிர் அணி மாவட்ட தலைவர் பா.ராஜலட்சுமி, மாவட்டத் துணைத்தலைவர் டி எல்.வி. தனலட்சுமி, மாநில பொதுச் செயலாளர் ஆர். சரவணன், ஹேம்நாத் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.