பிராட்வே :உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும், சென்னை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
இம்முகாமில் 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் குருதி கொடை தானம் வழங்கினர்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களான ச.லாவண்யா.,சு.சுஜாதா, பு. சுஜாதா, இரா.இந்துமதி, அ.செபஸ்தி சகாய மாலதி ஆகியோர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது.
மேலும் இந்த ரத்த தான முகாமில் இருநூற்றிற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துக் கொண்டனர்..


