சென்னை: டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், மத்திய, மாநில அரசின் கொள்கை தயாரிப்பாளரும், மக்கள் நீதி மய்ய அரசியல் ஆலோசகருமான விஞ்ஞானி.வே.பொன்ராஜ் அவர்கள் சென்னை கோடம்பாக்கம் அலுவலகத்தி _ல் மனித உரிமை ஆர்வலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும், அதே வேளையில் பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதே போல வளர்ச்சி பாதையில் சமுதாயத்தை கொண்டு செல்ல அறிவார்ந்த அரசியலில் முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

தாங்கள் அழைக்கும் போது நிச்சயம் அரசியலில் நற்பணியாற்ற நிச்சயம் வருவோம் என மனித உரிமை ஆர்வலரும்,சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகளான கார்த்திக்குமார்,சாலமன் தினேஷ்,ஹரிஹரன்,இலக்கியா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.