அகில இந்திய பயங்கரவாத ஒழிப்பு முண்ணனியின் தலைவரும்,பஞ்சாப் முன்னாள் அமைச்சருமான மணிந்தர் ஜித் சிங் பிட்டா அவர்கள் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வியாசர்பாடி பகுதிக்கு வந்திருந்தார்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இலங்கையில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் குறித்து மிகவும் வருத்தம் அடைவதாகவும், அங்கு இருப்பவர்கள் அனைவரும் நம்முடைய சகோதர சகோதரிகள் . அங்கு தற்போது நிலைமை சீராக இல்லை என்பதை அறிந்து மிகவும் வேதனை படுகிறேன்.
மோடி அவர்கள் அங்கு பல்வேறு பிரச்சனைகளால் துன்ப படுகின்ற மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஏனென்றால் அது நம்முடைய அண்டை நாடு அவர்கள் நம்முடைய சகோதரர்கள்.
இலங்கையில் நடக்கின்ற சம்பவங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். நம்முடைய நாடாக இருந்தாலும்,அண்டை நாடாக இருந்தாலும் ஓட்டு வாங்குவதற்காக இலவசங்களை வழங்குவது தவறு
ஓட்டிற்காக நாம் இலவசங்களை வாரி வழங்கி கொண்டு இருந்தால்,இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை தான் அனைத்து நாட்டிற்கும் வரும்
அரசியல்வாதிகள் ஊழல் வாதிகளாக இருக்க கூடாது, மக்களையும் ஊழல் வாதிகளாக மாற்ற கூடாது. எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்தால் பாதுகாப்பை எப்படி பலப்படுத்துவது.
பஞ்சாப்பில் மீண்டும் காலிஸ்தான் வேண்டும் என்ற குரல் எழுந்து வருகிறது. காலிஸ்தான் ஒரு போதும் உருவானதில்லை,உருவாகாது. உருவாகுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பல குண்டுகளால் துளைக்கப்பட்ட எனது உடல் உள்ள வரை காலிஸ்தான் வர நான் விட மாட்டேன்.
பிற மாநிலங்கள் தமிழ் நாட்டு காவல் துறையிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும். நான் இங்கு இருக்கின்ற தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அவர்கள் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.அவர் பாதுகாப்பு விசயத்தில் நல்ல முறையில் செயல்படுகிறார்.
நரேந்திர மோடி அவர்கள் காஷ்மீரில் 370 பிரிவை நீக்கியதன் மூலம் 65 ஆண்டுகளாக இருந்த கேன்சர் போன்ற ஒரு நோயை நீக்கியிருக்கிறார்.
என தெரிவித்தார்.
