சென்னை:
பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள் என த.வெ.க., தலைவர் விஜய் அலர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது. ஒலிவாங்கி கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பேச வேண்டும்,சுய விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டுமென சீமான் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொட்டி வருகிறார்.

கட்சி தொடங்கிய போது பெரியாரை புகழ்ந்து பேசிய ஆர்.எஸ்.எஸ்.
கைக்கூலியும்,
வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டிருக்கும் சீமான் தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை சமீப காலங்களில் பேசி வருகிறார்.
கொள்கை நிலைப்பாடு இல்லாத சீமான் போன்றவர்கள் தமிழக அரசியலில் இருந்து விரைவில் மக்களால் விரப்பட்டுவார்கள், விரட்டி அடிக்கப்படுவார்கள்,
கட்சி தொடங்கி ஒரு ஏன் ஒரு கவுன்சிலர் பதவியை கூட வெற்றி பெறமுடியாத சீமான்
தமிழக வெற்றிக் கழகம் குறித்தும், அதன் தலைவர் குறித்தும் அவதூறாக பேசிவருவது கோமாளி தனமாக உள்ளது.

சீமானின் கிறுக்கு தனமான வார்த்தையையும்,கோமாளி போன்றே எப்பவும் பேசிக்கொண்டிருக்கும் நடவடிக்கையும் ஏற்று கொள்ள முடியாத நிர்வாகிகள் பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள்
.
அதுமட்டுமல்லாமல் கட்சிக்கு நிதி வேண்டும் என மாவட்டந்தோறும் வசூல் செய்து அதில் ஆடம்பரமாக வாழ்ந்து வரும் சீமான், பணக்கொழுப்பு என த.வெ.க. தலைவர் விஜய் அவர்களை பேசுவது சீமானின் வாய்கொழுப்பு அதிகமாகி விட்டதை காட்டுகிறது.
அரசியல் வியூக வகுப்பாளர் தனக்கு தேவையில்லை, என்னை போன்றவர்களுக்கு தேவையில்லை என சீமான் பேசுகிறார்.
சீமான் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும், அவர் நாம் தமிழர் கட்சியை தொடங்கியது முதல் எளிய மக்களுக்கு ஏதாவது உதவி செய்தாரா? தேர்தலில் அரசியல் வியூக வகுப்பாளரை நியமனம் செய்தாரா ?
சீமான் பேசிவரும் ஆமை
கதைகளை கேட்க தமிழ்நாடு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் கிடையாது. இப்படியே சீமான் பேசி கொண்டு இருந்தால் அவரது வாய்கொழுப்புக்கு அரசியலை விட்டு விரைவில் காணாமல் போகும் காலம் வெகுதூரம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
