அண்ணாநகர்:
தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கம் மற்றும் ஜிவிஎன் ஹோம்ஸ் (GVN Home’s) சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கத்தின் நிறுவனர்
முனைவர் வி. விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் அண்ணாநகர் பகுதியில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் GVN Home’s இயக்குனர் ராஜாகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வின் போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.

இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் வெகுமதிகள் அளித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள்,
மற்றும் GVN Home’ s நிர்வாகிகள் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.