ஆவடி:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான 4வது செயற்குழுக்கூட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் பேரவை நாட்காட்டி வழங்கும் விழா நிகழ்ச்சி இதன் நிறுவனத் தலைவர் எம்.எஸ். சரவணன் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரை பகுதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் த.கோ. தாயுமானவன் அவர்கள் சிறப்பான தொகுப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் செயல் தலைவர்
எஸ்.தாமோதரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் பி.சுகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இதில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.எஸ் மூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினா
ர்.
துணைத்தலைவர் என்.சிவக்குமார் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

ஒருங்கிணைப்பாளர் ஜி. பார்த்திபன்,
அமைப்பு செயலாளர்
ஜே. அசோகன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
துணைபொதுச்செயலாளர் ஆர். கோட்டீஸ்வரன்,
அமைப்பு செயலாளர் டி. இளங்கோவன் ஆகியோர் விழா ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.நெய்வேலி-வடலூர் கரூணீக ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர், செயலாளர், பொருளாளர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ தலைவர்கள், துணைத்தலைவர்கள்,துணை மற்றும் இணைச் செயலாளர்கள், கௌரவ ஆலோசகர்கள்,செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்துக் கொண்டனர். இறுதியில் துணை பொருளாளர் வி. அச்சுதரமேஷ் அவர்கள்
நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்நிகழ்வில் இப்பேரவையின் நிறுவனத் தலைவர் எம். எஸ். சரவணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.