கள்ளக்குறிச்சி :மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பேரவை கூட்டம்
கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் விடுதி கூட்டரங்கில்
மாநில தலைவர்
எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில்
நடைப்பெற்றது.
பொதுச்செயலாளர்
ஏ. டி. சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.
டி.கநதநாதன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் இம்மையத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் என். எஸ். செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இதில் பி.ஜெயபிரகாஷ் அமைப்புச் செயலாளர், பி. குமார் மாநில பொருளாளர், எஸ். கல்யாணசுந்தரம்மாநில செயற்குழு உறுப்பினர், பி. ஆறுமுகம் மாவட்ட செயலாளர், மகளிர் அணி நிர்வாகிகள் ஐ. கௌதமி,எம். அம்பிகா,ஜெ. சுகந்தி,தியாகதுருகம் தலைவர் வெங்கடேசன், செயலாளர் கோவிந்தராஜ், கல்லக்குறிச்சி. நகர செயலாளர் வி. காமராஜ்,எம். ராஜகோபால். வீரசோழபுரம் செயலாளர் மாரிமுத்து, பாசார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் 2025 ஆம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகளாக மாநில தலைவர். பி.எஸ்.ரமேஷ், துணை தலைவராக வி. பன்னீர்செல்வம்,
பொதுச் செயலாளராக எஸ். கல்யாண சுந்தரம், துணை பொதுச்செயலாளராக. எஸ். சங்கரநாராயணன்,
பொருளாலராக. பி. குமார், அமைப்பு செயலாளராக பி. ஜெயப்பிரகாஷ், பிரச்சார செயலாளராக. டி. கந்த நாதன்,
மாநில செயற்குழு உறுப்பினர் களாக எம். ராஜகோபால், மோதிலால் சிங்,மகளிரணி
அமைப்பாளர்களாக.ஐ.கௌதமி, எம். அம்பிகா ஜெ.சுகந்தி ஆகியோரும்.கல்லக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளாக
டி. சதீஷ்குமார் தலைவர்,
பி. ஆறுமுகம். செயலாளர்,பொருளாளர் டி. கந்தப்பிள்ளை,
கல்லக்குறிச்சி நகர தலைவராக. மைக் சேகர், செயலாளராக வி. காமராஜ், பொருளாலராக ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இறுதியில் மாநில பொருளாளர் பி.குமார் நன்றியுரை நல்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:
இந்திய நாட்டில் ஓடும் அனைத்து நதிகளையும் ஒன்றுடன் ஒன்று இணைக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்வது, மதுரையில் மாநில மக்கள் விருப்பத்திற்கு எதிராக சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் மத்திய அரசு வழங்கி உள்ள டங்ஸ்டன் வெட்டி எடுக்கும் திட்ட அனுமதியை உடனடியாக திரும்பபெறவேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகள்,நதிகள் ஆகியவற்றை இனைப்பதோடு ஏரிகள், குளங்கள்,நீர் குட்டைகளை தூர்வாரி நதிகளோடு அனைத்து மழைக்காலங்களில் உண்டாகும் உபரி நீரை கடலுக்கு செல்லாமல் தடுத்து சேமித்திட நடவடிக்கை எடுக்க தமிழக அரசைகேட்டுக்கொள்வது,
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள. நீர் நிலைகளான ஏரிகள், குளங்கள்,நீர்மூழ்கி குட்டைகள், பாசன வடிகால் கால்வாய்களை அரசு ஆவணப்படி கண்டு பிடித்து அவைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு களை அகற்றி மழைநீர் சேமித்திட நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது,
தமிழ்நாடு அரசு அலுவலகங்கள்,கல்வி நிலையங்கள், மின்வாரியம், போக்குவரத்து துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் பணி நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிந்து பணியாற்றிட வேண்டும் என்கிற அரசு ஆணையை செயல்படுத்திட வேண்டும் என அரசைகேட்டுக்கொள்வது, தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தேசிய,மாநில நெடுஞ்சாலை களில் இயங்கும் உணவு விடுதி களை அவ்வப்போது ஆய்வு செய்திட தமிழக அரசைகேட்டுக்கொள்வது,
அரசு பேரூந்து களில் பணியில் உள்ள நடத்துனர்,ஓட்டுனர்கள். பணிமனைப்
பணியாளர்கள் நிர்வாக அலுவலர்கள் பணிவில்லை மற்றும் பெயர்வில்லை அணிந்து பணியாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரி களை கேட்டுக் கொள்வது,
கல்லக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட புறநகர் பேருந்து நிலையம் அமைத்திடவும். சுற்றுவட்ட பாதை, பாதாள சாக்கடை திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட தமிழக அரசைகேட்டுக்கொள்வது,
கல்லக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் உடனடியாக பணியாளர்களை நியமனம் செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தில் பிளஸ் பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும், பயன்பாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டன.