சென்னை:அனு கிருஷ்ணா கோவில் திருவிழாவில் திடீரென காணாமல் போன தனது மாற்றுத் திறன் படைத்த தம்பி தர்ஷித்தை தேடுவதும், தொழிலதிபர் அருள்மணியை கடத்தி வைத்துக்கொண்டு அவரது மனைவியிடம் பணம் பறிக்க முயற்சிக்கும் ஆதேஷ் பாலா, சாம்ஸ் மற்றும் மாரீஸ் ராஜா ஆகியோர் கதை நாயகியான அனு கிருஷ்ணாவையும் கடத்துகின்றனர்.
காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுதிறன் படைத்த 10 வயது சிறுவனான அனு கிருஷ்ணாவின் தம்பி ஆபத்தில் சிக்கியிருக்கும் தனது அக்காவை காப்பாற்ற முயற்சிக்கிறார்.
இந்த சிறுவனின் முயற்சி வெற்றி பெற்றதா?, ஆதேஷ் பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் முயற்சி வெற்றி பெற்றதா? என்பதை பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்வது தான் ‘பிதா’ படத்தின் விருவிருப்பான கதை களம்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா வில்லத்தனமான நடிப்பில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த வில்லனின் நண்பராக நடித்திருந்தாலும், தனது டைமிங் காமெடி வசனங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் சாம்ஸ்.

கதை நாயகியாக நடித்திருக்கும் அனு கிருஷ்ணா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை குறைவில்லாமல் நிறைவாக செய்திருப்பத்துடன், தனது கதாபாத்திரத்தில் கன கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியும் காதலனை நினைத்து வருத்துவதும், காணாமல் போன தம்பியை தேடும் போது பதற்றம் அடைவது என்று உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
சின்னத்திரை பிரபலம் ரெஹனா முதல் முறையாக வெள்ளித்திரையில் வித்தியாசமான வேடம் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார்.
முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்
மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரீஸ் ராஜா, அருள்மணி, சிவன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் ஒளிப்பதிவு, நரேஷின் இசை, ஸ்ரீவர்சனின் படத்தொகுப்பு, கே.பி.நந்துவின் கலை இயக்கம், கென்னடியின் வசனம் என அனைத்தும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் இயக்குனர் எஸ்.சுகன் கடத்தல் கதையை, எளிமையான திரைக்கதையோடு சொன்னாலும், அதில் எதிர்பார்க்காத சில திருப்பங்களை வைத்து விறுவிறுப்பாக சொன்னதுடன், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
கதை, திரைக்கதை மற்றும் மேக்கிங் ஆகியவை ஒரு பக்கம் இருந்தாலும், இப்படி ஒரு படத்தை 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்திருப்பது வியப்பாக இருக்கிறது.
குறிப்பாக பிரமாண்டமான கோவில் திருவிழாவில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கிய விதம், கடத்தல் காட்சிகள் அதை தொடர்ந்து இடம் பெறும் திருப்பங்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
இந்த முழு படத்தையும் ஒரே நாளில் படமாக்கிய விதம், படத்தின் தரமும் படத்தை மனமாற பாராட்ட வைக்கின்றது.
மொத்தத்தில் பிதா 23:23 திரைப்படத்தை பார்த்தால் நிச்சயம் மறுபடியும் பார்க்க தோன்றும் திரைப்படமாக அமையும்.
Casting : Adhesh Bala, Chams, Anu Krishna, Sriram Chandrasekar, Master Darshith, Maris Raja, Arulmani, Rehana
Direction : S.Sugan
Producer : SR Film Factory – G.Sivaraj
Music : Naresh
