சென்னை இளைஞர் ஹரிஹரன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த உதவிக்கரம் டிரஸ்ட்!

திருநெல்வேலி:
உதவிக்கரம் சேவா பப்ளிக் சாரிட்டபில் டிரஸ்ட் சார்பில் கெளரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கும் விழா திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது.
இந் நிகழ்வில் சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த மா. ஹரிஹரன் அவர்களுக்கு பல்வேறு சமூக சேவைகளான கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பசியாற்றுதல், மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறும்படமான ஒழிப்போம், அழிப்போம்,காப்போம் என்கிற குறும்படம் மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தியது உள்ளிட்ட பல சமூக சேவைகளுக்காக கெளரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.