ஈரோடு : கடந்த 15ம் தேதி அந்தியூரில் இருந்து பவானி ,ஈரோடு வழியாக பழனி செல்லும் அரசுப் பேருந்து பவானி செல்லும் வழியில் இரட்டைகரடு அருகே பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளானது.

பழைய இரும்புக்கு போடும் நிலையில் இன்னமும் இதுபோன்று ஆயிரக் கணக்கான பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். மெதுவாகத்தான் வண்டி சென்றது. ஓட்டுனர் பிரேக்மீது ஏறி நின்றும் கூட பேருந்து நிற்கவில்லை. முன்னால் சென்ற லாரி ஆடு குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் பிடித்தார். லாரி நல்ல கண்டிசனில் இருந்ததால் நின்றுவிட்டது. பெண்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதியளித்தபின் வருமானம் குறைந்து பேருந்துகளை பராமரிக்க இயலாமல் போனதுதான் காரணம்.
