கொளப்பாக்கம்:முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் அவர்கள் பிறந்தநாள், சிங்கம் அறக்கட்டளையின் 11ம் ஆண்டு துவக்க விழா மற்றும் AI Awards2023 ஆகிய மூன்று நிகழ்வுகளை சேர்த்து முப்பெரும் விழாவாக ஸ்மால் ஸ்டோன்ஸ் அறக்கட்டளை, Svp educations மற்றும் சிங்கம் அறக்கட்டளை ஆகியவற்றின் முப்பெரும் விழா வண்டலூர் அருகே உள்ள கொள ப்பாக்கதில் அமைந்துள்ள ஶ்ரீ பாலாஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக நடிகரும் எழுத்தாளருமான V.I.S. ஜெயபாலன் அவர்களும், அறிவியலாளர் முனைவர். E.K.T. சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக K. செல்வராஜ், R. வெங்கடேசன் இயக்குனர்கள், Right Choice SP Promotors, A. வரதன் ஆறுமுகம், நிறுவனர் வணிகர் சம்மேளனம், சுப்பிரமணியன் சீனியர் பொது மேலாளர், module quality, mobis India Ltd. ,P.S.வாசன் நிர்வாக இயக்குநர் மாலையுகம். டாக்டர். S. பாபு, tamilnadu business head, Railwire ICT PVT Ltd. கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கு A. விநாயகமூர்த்தி முடிச்சூர் ஊராட்சி துணை தலைவர் தலைமை தாங்கினார். பேராசிரியர் முனைவர் A. பழநி வரவேற்பு உரையாற்றினார். முனைவர். N. கோபி தலைமை உரையாற்றினார். முனைவர் G. சரவணன் அவர்கள் அனைவரையும் கௌரவித்தார். ஸ்மால் ஸ்டோன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் P. சுரேஷ், J.நந்தகோபால், அன்புகரங்கள் சரவணன், சிங்கம் அறக்கட்டளை A. சுரேஷ், E.ஆனந்தன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவினை சிங்கம் அறக்கட்டளையின் நிறுவனர் E.பிரகாஷ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.