ஒபிஎஸ் அணி சார்பில் அ.இ.அ.தி.மு.க வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு! 

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் துவங்கப்பட்ட  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 ம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் போயஸ் கார்டன் பகுதியிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் இல்லம் அருகில் ஆயிரம் விளக்கு பகுதி கழக செயலாளர் போயஸ் கார்டன் கே.பி.கேசவன் அவர்கள் தலைமையில் அ.இ.அ.தி.மு.க வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

இந்நிகழ்வில் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் முனைவர் எம்.வீ. சதீஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கினார். 

இந்த விழாவில் கழக அமைப்பு செயலாளர் வளசை மஞ்சுளா, கழக மீனவரணி செயலாளர் ஜெ.கோசுமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.