ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா!

திருவல்லிகேணி:ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு அருகில் ஸ்ரீ வி.எஸ்.எஸ் ஜெயின் டிரஸ்ட்டின் செயலாளர் ஆனந்த் நகோரி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் தேரபந்தி சங்க நிர்வாகி சுரேஷ் பாய் சஞ்சேதி,மூர்த்திக் புஜக் சங்க நிர்வாகி லலித் ரத்தோட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த அன்னதான விழாவில் 1500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவை உணவுகள் மற்றும் மோர் வழங்கப்பட்டது.