சாம்சங் கேலக்ஸி இசட் தொடருக்கான புதிய அறிவிப்பை ஆலியா பட் மூலம் அறிமுகப்படுத்தியது; #FlexEveryAngle மூலம் வாழ்க்கையின் விழாக்களைப் படம்பிடியுங்கள்

சென்னை:சாம்சங் இரண்டு பிரமிக்க வைக்கும் MZ ஐகான்களை அறிமுகப்படுத்துகிறது. நடிகை ஆலியா பட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Z Flip4 மற்றும் Galaxy Z Fold4 ஸ்மார்ட்போன்களை உங்களின் மறுபக்கத்தை காண்பிக்கும் புதிய பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக கொண்டு வந்துள்ளது.

“கடந்த சில வருடங்களாக எனது அன்றாட தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு பகுதியாக Galaxy Z தொடரைப் பயன்படுத்தி வருகிறேன். எனது ரசனைக்கு ஏற்ற புதிய மாதிரிகளை பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். Galaxy Z Flip4 மற்றும் Z Fold4 ஆகியவை எனது ஆளுமையின் பிரதிபலிப்பாக இருந்து நான் யார் என்பதை வெளிக்காட்டுகிறது. Galaxy Z Flip4 இல் உள்ள தனித்துவமான FlexCam அம்சமானது வெறுபட்ட கோணங்களில் வீடியோக்களைப் படமெடுக்கவும், காட்சிகளைப் படம்பிடிக்கவும் ஏற்றதாக உள்ளது. நான் ஃபோல்டபில் போன்களின் புதிய அம்சங்களைக் காட்சிப்படுத்த மீண்டும் இந்த பிராண்டுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று நடிகை ஆலியா பட் கூறினார்.

அடுத்த சில மாதங்களில், ஹைப்பர்லோகல் மற்றும் டேட்டா சார்ந்த வீடியோக்களுடன் டிஜிட்டல் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளை உள்ளடக்கிய 360 டிகிரி விநியோகத்தில் ஆலியா பங்கேற்பார்.

Galaxy Z தொடரின் பண்புக்கூறுகளை அவர் உண்மையிலேயே புரிந்துகொண்டிருப்பதால், இரண்டாவது ஆண்டிற்கான ஃபோல்டபில்ஸ்-காக ஆலியா பட் உடன் இணைந்து பணியாற்றவிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Galaxy Z Flip4 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், Galaxy Z Flip4 ஆனது ஸ்டைலில் தனித்திருக்கிறது என்பது அலியாவின் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது. எங்கள் மிலினியல் மற்றும் ஜென் இசட் பார்வையாளர்களை, மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் சுய -வெளிப்பாட்டின் மூலம் ஊக்குவிப்போம் என்று சாம்சங் இந்தியாவின் தயாரிப்பு சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த இயக்குநரும் தலைவருமான ஆதித்யா பப்பர் கூறினார்.

Galaxy Z Flip4 -ன் வெற்றியில் அடங்கியிருக்கிறது சேம்சனின் ஐகானிக் ஃபாம் பேக்டர். மேம்படுத்தப்பட்ட கேமரா அனுபவம், பெரிய பேட்டரி மற்றும் விரிவுபடுத்தப்பட்ட தனிப்பயனாக்கம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைச் கொண்டிருப்பதோடு, அதிக-வசதியான வடிவமைப்பையும் இது கொண்டிருக்கிறது.

Galaxy Z Fold4 ஆனது சாம்சங்கின் மிகவும் விரிவான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குவதன் மூலம் பயனர்களுக்கு புதிய வசதிகளை உருவாக்கி தருகிறது. மேம்பட்ட கேமரா தொழில்நுட்பம் மற்றும் சக்திவாய்ந்த செயலி மட்டுமல்லாமல் கூடுதலாக வடிவத்தை மாற்றும் வடிவமைப்பு, அதிவேக மற்றும் ஃபெக்சிபில் டிஸ்ப்ளேஸ் மற்றும் PC போன்ற பல்பணி அம்சங்களை வழங்குகிறது.