கே.சி.ஜி தொழில் நுட்பக்கல்லூரி(KCG Tech) மற்றும் ஒய்’ஸ் சர்வீஸ் கிளப் ஆஃப் சென்னை, காரப்பாக்கம் (Y’s Service Club of chennai, Karapakkam) உலக தற்கொலை தடுப்பு தினம் குறித்த அறிக்கை வெளீயீடு

“உயிர் விலைமதிப்பற்றது; KCGTech அதை போற்றுகிறது”

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை ஒரு சமூகப் பிரச்சினையாக மாறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 800,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சமீபத்திய 2021 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 93, 580 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கொரோனாவுக்குப் பிறகு தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, தற்கொலையைச் சுற்றியுள்ள களங்கத்தை குறைத்து, தகவலறிந்த நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள தற்கொலை நிகழ்வுகளை குறைக்க முடியும்.

தற்கொலை தடுப்புக்கான இந்திய சங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பு,
2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை “செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” என்று அறிவித்தது.
அக்கருப்பொருளை செயல்படுத்த கே. சி. ஜி டெக் மற்றும் ஒய்’ஸ் சர்வீஸ் கிளப் ஆஃப் சென்னை, காரப்பாக்கம் இணைந்து கே.சி.ஜி கல்லூரி, காரப்பாக்கம் முதல் எட்வர்ட் ஏலியட்ஸ் கடற்கரை வரை சுமார் 15 கி.மீ மாரத்தான் ஏற்பாடுகளை தற்கொலை தடுப்பு மையத்திற்கு வழங்கப்படுகிறது.

சினேகா தற்கொலை தடுப்பகத்தின் இயக்குநர் எம். சி ஆனந்த் அவர்கள் ஏலியட்ஸ் கடற்கரையில் திரண்டிருந்த பார்வையாளர்களை நோக்கி பேசும் போது “தற்கொலை என்பது உதவிக்கான கூக்குரல். அந்த நபர் உண்மையில் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதில்லை. அந்த நேரத்தில் அந்த நபர் கேட்கப்பட்டு, உரிய கவனிப்பு மற்றும் ஆதரவு அளிக்கப்படுகிறது, உயிர் காக்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

இந்த மாரத்தான் பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதற்காக பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் தற்கொலைத் தடுப்புக்குறித்து துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன

மேலும் விபரங்களுக்கு:

தமிழ்நாடு உதவி எண்கள்:

தமிழ்நாடு மனநல உதவி எண்: 104 (24/7)

சினேகா இந்தியா பவுண்டேஷன்: 044-24640050 (காலை 10.00 முதல் இரவு 10.00 வரை, அனைத்து வார நாட்களும்)
மின் அஞ்சல்: help@snehaindia.org