தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்களை அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இதில் முன்னால் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.வி தங்கபாலு,சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, , தமிழ்நாடு காங்கிரஸ் ஆர்.டி.ஐ பிரிவு மாநில தலைவர் வழக்கறிஞர் சி.கனகராஜ்தமிழக காங்கிரஸ் சேவாதள மாநில தலைவர் குங்க்பூ விஜயன் மற்றும் மாவட்ட தலைவர்களான ,சிவ.ராஜசேகரன், ஜெ.டில்லிபாபு,எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத்,எம்.பி.ரஞ்சன் குமார்,முத்தலகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.


தமிழ்நாடு காங்கிரஸ் ஆர்.டி.ஐ பிரிவு மாநில தலைவர் வழக்கறிஞர் சி.கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்.மத்திய அரசு அமலாக்க பிரிவை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்துகிறது தேசத்தின் பொதுத்துறையான அமலாக்கப் பிரிவு தற்போது பாஜகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றம் சாட்டினார். வருகிற 2024 ஆம் ஆண்டில் பிரதமர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தே தீரும் என்று கூறினார்.