சென்னை:இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் இப்பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தை நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க
தலைவர் பத்மநாபன் துவக்கி வைத்தார்.

மேலும் இந்த உண்ணாநிலை அறப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக விரோத ரவுடி கும்பல்கள் மாமூல் கேட்டு சிறுவியாபாரிகளை தாக்குவதும், படுகொலை செய்வதும் கட்டுபடுத்தப்பட வேண்டும்,
தமிழக அரசிற்கு வரி வருவாய் ஈட்டி தருகின்ற முக்கியமான பணி செய்து வரும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி, தாக்குதல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன..

மேலும் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் இந்திய நாடார் பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வணிகர்கள் சமூக விரோத ரவுடி கும்பல் களால் மாமூல் கேட்டு மிரட்டியும், கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தியும் வருகின்றனர். இந்த சமூக விரோத ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தின் மூலமாக வலியுறுத்திப் பேசினார்.

மேலும் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் பல்வேறு நாடார் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளான நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மின்னல் ஸ்டீபன், இந்திய நாடார்கள் பேரமைப்பின் துணைத் தலைவர் ஜாக்குவார் தங்கம், இந்திய நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் நாடார், அகரகட்டு லூர்து நாடார் பொருளாளர் ஏ.எம்.டி சிவக்குமார், பொதுச்செயலாளர் கே.எஸ். மலர்மன்னன், இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ். எம் கார்த்திகேயன், மாநில வியாபாரிகள் முன்னேற்ற அணி தலைவர் மாதவன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்..

இறுதியில் இந்த உண்ணாநிலை அறப் போராட்டத்தை தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என். ஆர். தனபாலன் அவர்கள் முடித்து வைத்தார்.

மேலும் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நாடார் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் திறளாக கலந்து கொண்டனர்.