குரோம்பேட்டை :
மனித உரிமைகள் மற்றும் மனிதநேய பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செய்து சமூக பாதுகாப்பு அமைப்பின் 10-ஆம் ஆண்டு விழா, லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் இரண்டு உலக சாதனை நிகழ்வு மற்றும் டயோசிஸ் ஆஃப் ஏசியா சார்பில் கவுரவ விருதுகள் வழங்கும் விழா குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முப்பெரும் விழாவில் மனித உரிமை செயற்பாட்டாளாரும், சோசியல் புரொட்டக்ஷன் மற்றும் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தி விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

தலைமை செயல் அதிகாரியான கார்த்திக்குமார் அவர்கள் வாழ்த்துரை நல்க,
இந்த நிறுவனத்தின் முதன்மை நீர்வாகிகளான ஸ்டீபன் சீனிவாசன் மற்றும் சாலமன் தினேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்ம பிரியா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தலைமை உரை ஆற்றினார்.

இந்த நிகழ்வினை ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய், உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் மருத்துவ துறையை சார்ந்த 100 தலைப்புகளில் ஒரு மணிநேரத்தில் புத்தகம் எழுதி பெங்களுரை சேர்ந்த டி.சுனிதா மற்றும் சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் இரண்டு கண்களையும் கருப்பு நிற துணியால் கட்டிக்கொண்டு 10 நிமிட நேரத்தில்,311 வகை பல்வேறு பொருட்களின் பெயர்களை சொல்லி அசத்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். இந்த இரு உலக சாதனைகளை தலைமை நிர்வாக அதிகாரி உமா செல்வம் அவர்கள் ஆய்வு செய்தார்.

மேலும் இந்த நிகழ்வில் வழக்கறிஞர் பத்மா பிரியா, உலக சமாதான அமைப்பினை சேர்ந்த ஜப்பான் பிரதிநிதி ஒனெடிரோ, வழக்கறிஞர் யுவராஜ் மற்றும் ஆந்திர மாநில செயலாளர் ஷீலா ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.

இந்த நிகழ்வில் கவுரவ அறிவர் பட்டம் பெற்ற அருண் பிரசாத், அக்னேஸ் சாந்தி, சேலம் கோமதி, ஜெயந்தி, கோவை சசிகுமார், கே.தேஜஸ்ரீ ஆகியோருக்கு டயோசிஸ் தலைவர் பிஷப் எபிநேசர் வழங்கினார்.
இந்த விழாவில் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.