ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி திமுக சார்பில் கோபாலபுரம் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் நிகழ்வு

சென்னை:முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோபாலபுரம் அம்மா உணவகத்தில் மூன்று வேளை இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு அவர்களின் ஆலோசனையின் பேரில்
திமுக பிரமுகர் ராயப்பேட்டை கு. ஶ்ரீராம் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கோபாலபுரம் அம்மா உணவகத்தில் மூன்று வேளை இலவச உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்-

மேலும் இந் நிகழ்வில் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி செயலாளர் மா.பா அன்புதுரை, வட்ட செயலாளர் யுவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திறளாகக லந்து கொண்டனர்.