சென்னை : மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் செயலாளர் அரிமா நந்தகுமார் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு சாந்தோமில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் காப்பகத்தில் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் அதன் செயலாளர் அரிமா நந்தகுமார் மற்று அவர் துணைவியார் மற்றும் சங்கத்தின் துணைத் தலைவர் அரிமா ராமசாமி, முன்னாள் தலைவர் அரிமா ஆர்.பி பாபு ஆகியோர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு மதிய உணவுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியைப் பற்றி அரிமா நந்தகுமார் கூறுகையில்: கொரோனா பரவல் பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இம்மாதிரியான காப்பகங்கள் நடத்துவது என்பது மிக சிரமமான ஒரு விஷயம் ஆகையால் நம்மைப் போல் உள்ளவர்கள் நம் வீட்டிலுள்ள ஏதேனும் விசேஷங்கள் அல்லது பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்களுக்கு இதுபோன்ற ஒரு ஆசிரமத்தில் நம்மால் இயன்றதை செய்தால் நன்றாக இருக்கும்.

இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நீங்கள் செய்ய விரும்பினால் மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம் உங்களுக்கு உதவிட தயாராக உள்ளது என்று தெரிவித்தார்

மேலும் தொடர்புக்கு:
அரிமா தியாகராஜன் தலைவர் 93810 19473
அரிமா நந்தகுமார் செயலாளர்
98413 13109
அரிமா நாகராஜன் பொருளாளர்
95519 88999