சென்னை ஆகஸ்ட் 15

தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சென்னையைச் சேர்ந்த 250 நடன இசைக் கலைஞர்களுக்கு மூன்றாவது கட்டமாக நலத்திட்ட உதவிகளை இச்சங்கத்தின் மாநில தலைவர் கே. பாலாஜி அவர்கள் தலைமையில் சென்னை. பெரியார் பாதை, ஆண்டவர் நகர் பகுதியில் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில்
சங்க நிர்வாகிகளான மாநில பொதுச் செயலாளர் எஸ்.முகுந்தன் மாநில பொருளாளர் ஆர். மதன்,துணைச் செயலாளர் பயர் குமார், துணைத் தலைவர் ஜி. கண்ணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.