சென்னை : ஜூன், 05
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்களை திறக்க ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது.
கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கால் மார்ச் 25 முதல் மூடப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை திறக்க அகில இந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட மதகுருமார்கள் தமிழக முதல்வருக்கு வைத்த கோரிக்கையை ஏற்று
தமிழகத்தில் வரும் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும், கட்டுப்பாடு தளர்த்தபடாததால், கோவில் திறப்பு தாமதமாகும் என தெரிகிறது.
அகில இந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகன்தாஸ் சென்னை அமைந்தகரையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் வைரஸை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நன்றி தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் ஜூன் 8 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் மேலும் வழிபாட்டுத் தலங்களில் முககவசம் வழங்குவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் சமய தலைவர்களுடன், நேற்று தலைமை செயலர் ஆலோசனை நடத்திய நிலையில், கோவில் திறப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது.
