சென்னை:
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை, கோட்டூர்புரம்
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ஆசிரியர் தின விழா சிறப்புற நடைப்பெற்றது.
மேலும் தமிழ்நாடு மாநிலம் முழுவதுமிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட ஆசிரிய மேன்மக்களுக்கு தமிழ்நாடு அரசின் உயரிய டாக்டர் ராதாகி ருஷ்ணன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் ஆறுமுகம் அவர்கள் தலைமை வகித்தார். பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் கண்ணப்பன்,
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செய லாளர் டாக்டர் சந்திரமோகன் (இஆப)பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து ஆசிரிய மேன்மக்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில்
சிறந்த ஆசிரிய அர்பணிப்பு பணிக்காக
சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியம், மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி பெ. மஞ்சுளா அவர்களுக்கு
டாக்டர் ராதாகிருஷ்ணன்
மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

