தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியை தொடர்ந்து 144 மக்கள் ஊரடங்கு அமுலுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள் தங்களை தனிமை படுத்தி வருகின்றனர். ஆனால் வீடற்ற ஏழை, எளிய ஆதரவற்றவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதை அறிந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் மனித நேயத்தோடு உணவு மற்றும் குடிநீர் வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு இலவச வாடகை சேவையும் செய்து வருகிறார்.


