நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்களை மறந்து…
வைரஸை கண்டு அலறுவதுநியாயமா?
- இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.
- வாசல் முற்றத்தில் நீரில் கால் கழுவி பிறகு வீட்டிற்குள் நுழைந்தது.
- மாவிலை,வேப்பிலை தோரணங்கள் கட்டியது.
- மஞ்சள் பூசி குளித்தது, மஞ்சள் நீரை ஒருவர் மேல் ஒருவர் ஊற்றி விளையாடியது.
- உணவில் மிளகு, சுக்கு மஞ்சள் சேர்த்தது.
- வாழை இலையில் உணவு சாப்பிட்டது.
- வேப்பங்குச்சி, வேலங்குச்சி, ஆலங்குச்சி, உப்பு,கரி கொண்டு பல் துலக்கியது.
- வேப்பம் இலையில் புகை போட்டது.
- மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.
- வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
11.எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.
நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.- வாய் மணக்க வெற்றிலை, பாக்கு போட்டது.
- மிளகு,சுக்கு, அதிமருதம்,சித்தரத்தை, வெற்றிலை, துளசி போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் காய்ச்சிய கஷாயம் அருந்துவது.
- வெள்ளாவியில் உடை வெளுத்தது.
16.மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் செல்லுதல்.
17.இறந்த பிரேதத்தை எரித்தது.
- அம்மை வந்தால் வெப்பம் பத்திரம் போடுதல்.
- வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நட்டு வைத்து, காலையில் துளசி செடியை சுற்றி வலம் வந்தது..
- மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி புகை போட்டது.
21.ஆடி, சித்திரை போன்ற மாதங்களில் அம்மனுக்கு காப்புக்கட்டும் திருவிழாக்கள் நடத்தி, தெரு முழுதும் வேப்பிலை தோரணங்கள் கட்டி, மஞ்சளையும், மாட்டு சாணத்தையும் கொண்டு வீட்டு வாயில்களில் மெழுகி மாக்கோலம் போட்டது. காப்பு கட்டிய காலங்களில் வெளியூர் சென்று இரவு தங்கக்க்கூடாது, வெளியூர் காரரும் நமது ஊரில் தங்கக்கூடாது என்ற பழக்கங்களை கடைப்பிடித்தது.
- எளிய உணவான கூழ் குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தியது.
23.சுக்கு, பனை வெல்லம் கலந்த பானகம், மாவிளக்கு, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை படையல் போட்டு, அவற்றை உண்ணும் போது உடல் சுத்தி பெற்று, வெப்பம் அதிகமாகி நோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகரித்தது.
24.தினந்தோறும் கோயிலுக்குச்சென்று துளசி தீர்த்தம் அருந்துவது.
- வீடுகளில் சாம்பிராணி புகை போட்டு கிருமிகளை அழித்தது.
26 வருடத்திற்கு ஒருமுறை சாமி தீர்த்தக்கரை செல்லும் வழக்கம் உள்ளது அனைவரும் சாமி கூட கடற்கரைக்கு சென்று சாமி நீராடுவது போல் நாமும் கடல்நீரில் நீராட வேண்டும் வருடத்திற்கு ஒருமுறை கடல்நீரில் நீராடினார் உப்புத்தண்ணி நம் உடம்பு முழுவதும் இருந்தாள் எந்த நோயும் அண்டாது
இவை அனைத்துமே கிருமியை தடுப்பதற்கும், எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நல்ல மரபுகள்.
இவைகளை சிறிது சிறிதாக மறந்து வருவதால், இன்று வந்திருக்கும் வைரஸை கண்டு நாம் பயந்து அலறிக்கொண்டிருக்கிறோம்.
இனியாவது நம் சந்ததியினரை காப்பாற்ற, நம் முன்னோர்கள் கடைபிடித்த நல்ல மரபுகளை நாமும் விடாமல் கடைப்பிடிப்போம்.
