தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரேனா வைரஸிலிருந்து வயதானவர்களை பாதுகாக்கும் வகையில் முதியோர் இல்லங்களில் முக கவசம், கிருமி நாசினி ஆகியவை சென்னை சாந்தோமில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் வழங்கபட்டது.
வி.எம்.எஸ். முஸ்தபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் நேற்றுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் இதுவரை ஆறு பேர் இந்த கொரோனா வைரசால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸ் தொற்றானது 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களையும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களையும் எளிதாக தாக்கும் என உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது. நம் வீட்டிலுள்ள சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் முதியோர் இல்லங்களில் உள்ள வயதானவர்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் பாதுகாப்பு வேண்டியதும் நம் கடமை. அந்த வகையில் சென்னை சாந்தோமில் அமைந்துள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் முதியோர்களுக்கு முக கவசம் மற்றும் கை கழுவும் கிருமிநாசினி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது, கைகளை கிருமி நாசினி கொண்டு எப்படி கழவுவது உள்ளிட்ட விழிப்புணர்வும் முதியோர்களிடம் ஏற்படுத்த பட்டது. அடுத்த கட்டமாக சென்னையில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற சிறார் இல்லங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கொரேனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் வகையில் முக கவசம் மற்றும் கை கழுவும் கிருமிநாசினி ஆகியவற்றை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பாக இலவசமாக வழங்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

