தமிழ்நாடு கியூப் அசோசியேஷனில் பயின்ற 3வயது மழலை ரூபிக்ஸ் கியூபிக்கில் புதிய கின்னஸ் உலக சாதனை!

சென்னை:சென்னை இராயபுரத்தை சேர்ந்தவர்கள் சரத்குமார் மற்றும் நன்னெறியாள். இவர்களின் 3 வயது மகள் சாய் சனந்தா.இவர் கடந்த 6 மாதமாக சென்னை முகப்பேரிலுள்ள
தமிழ்நாடு கியூப் அசோசியேஷனில் பயின்று வருகிறார்.


மேலும் அவர் தமிழ்நாடு கியூப் அசோசியேஷனின் பொருளாலரும்,
பயிற்சியாளருமான ஆனந்த் அவர்களின் வழிக்காட்டுதலின் படி உலகத்தில் முதல் முறையாக புதிய கின்னஸ் சாதனையான 3×3 ரூபிக்ஸ் கனசதுரத்தை தீர்த்த உலகின் மிக இளைய குழந்தை என்கிற சாதனையை 3×3 ரூபிக்ஸ் கனசதுரத்தை 2 நிமிடம் 56 வினாடிகள் மற்றும் 49 மில்லி விநாடிகளில் கன சதுரத்தில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


மேலும் அவர் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் 2 நாட்களில் தீர்க்கும் இளையவர் என்பதற்காக கடந்த மார்ச் 25, 2023 அன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உறுதி செய்யப்பட்டது.


இதற்கு முன்னதாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் அதுல்யா மிஸ்ரா, ஐ.ஏ.எஸ்.அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சாய் சனந்தா பற்றி:
உலக இளைய குழந்தை (World youngest kid)-ல வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் பண்ணிருக்காங்க, அதோட மட்டுமில்லாமல் கின்னஸ் ரெகார்ட்ஸும் பண்ணி இருக்காங்க, நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவங்க ஆறு நடனப்போட்டிகளுக்கு மேல கலந்துக்கொண்டு இரண்டாம் பரிசு மற்றும் சிறந்த செயற்பாட்டிற்காக வெற்றி வாகை சூடி இருக்காங்க இது மட்டுமில்லாமல் திருக்குறள் போட்டியிலும் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றிருக்காங்கங்க,வீட்டிலும் ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பாங்க, ஒவியம் வரைதல் மற்றும் எழுத்தாற்றலிலும் ஆர்வமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rubik’s cube world record contact: Tamilnadu Cube Association:
73389 67178


