தமிழ்நாடு மாநில கேரம் சங்க தேர்தல் 2022-2026 க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு:
சென்னை: தமிழ்நாடு மாநில கேரம் சங்கம் சார்பில் 2022-2026 ஆம் ஆண்டிற்கான சங்க தேர்தல் 16.10.2022 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தேர்தல் அதிகாரி ஏ. வி. எஸ். மதுசூதன் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

இதில் தலைவராக எம். நாசர்கான் @அமான் பொதுச்செயலராக ஏ. மரிய இருதயம், இணைச் செயலாளராக ச. சக்திவேல் ,பொருளாலராக ஆர். கா கார்த்திகேயன்,மூத்த துணைத்தலைவராக எஸ். சிவக்குமார்,துணைத்தலைவர்களாக எஸ். கார்த்திகேயன், டி.எம்.ராஜகோபால்,எஸ்.இளங்கோவன், எஸ். அபுதாகீர், என். எம். பி. காஜா முகைதீன், சி. ராம சுப்பிரமணியன், என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன்,இணை மண்டல செயலாளர்களாக ஏ. சிவக்குமார்,டி.ஜே.தங்ககுமார், பி.வின்சென்ட், கே.மாரியப்பன், ஆர்.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு மாநில கேரம் சங்க உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
