கிண்டி :
சென்னையை மையமாக கொண்ட Start up நிறுவனமான Go-Fuel, தனது புதிய சேவையான நடமாடும் எரிபொருள் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்தியாவிலேயே முதல் முறையாக Non-OEM அல்லாத மற்றும் PESO சான்றிதழ் பெற்ற நடமாடும் எரிபொருள் சேவை நிறுவனமாகும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சேவையை வழங்க மேலும் 1000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக தாங்கள் விரும்பும் இடத்திற்கே எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம். இந்தசேவையானது வணிகர்களுக்கும், விவசாய பெருங்குடி மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
SMART BOWSER என்று அழைக்கப்படும் இந்த மொபைல் பெட்ரோல் பம்புகள் விரிவான பாதுகாப்பு அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
மேலும் கலப்படமற்ற, தரமான எரிபொருள் சேவையை வழங்குவதே இந்த நிறுவனத்தின் முதல் குறிக்கோள் என்று இதன் தலைமை செயல் அதிகாரியான
வினோத்ராஜ் தெரிவித்தார்.
இந்த எரிபொருள் BOWSER கள் அனைத்தும், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அனுபவம் மிக்க நிறுவனமான N.S. Rama Rao Body Works, நிறுவனத்தில் தயார்செய்யப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் இது போன்ற எரிபொருள் வாகன உற்பத்தியில் கடந்த 55 வருடங்களாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்த செயல் திட்டம் N.S. Rama Rao Body Works, நிறுவன சேவையில் ஒரு மைல்கல் ஆகும். இந்த சேவை மிகவும் தரமானதாகவும், சுலபமாகவும் உள்ளதால், எதிர் வரும் காலங்களில் இந்த சேவை அனைத்து தரப்பினரிடத்திலும் மிகவும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
