சென்னை :

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 124(அ)வது வட்ட கழக பொறுப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாள் விழா மயிலாப்பூர் மசூதி தெருவில் நடைபெற்றது.

முன்னதாக மயிலை பகுதி கழக செயலாளர் தா.வேலு அவர்களிடமிருந்து ஆசிபெற்ற பிறகு 124 வது வட்ட கழக பொறுப்பாளர் டி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேக்வெட்டி பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட மெட்ராஸ் லஸ் அரிமா சங்க செயலாளர் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் பொதுமக்கள் சிலர் முகக் கவசம் அணியாமல் இருப்பதை கண்டு அவர்களுக்கு முக கவசத்தை வழங்கினார் .

மேலும் அவர் குறிப்பிடுகையில் இன்று இருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் முகக் கவசம் கொரோனோவிலிருந்து நம்மை காக்கும் உயிர்க்கவசம் இருப்பினும் இன்று ஒரு முகக் கவசம் குறைந்தபட்சம் 20 முதல் 30 ரூபாய் வரை உள்ளது அன்றாட பிழைப்புக்கு திண்டாடிக் கொண்டிருக்கும் சில பொது மக்களால் இத்தகைய செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் இருப்பது சங்கடமே, ஆகவே அரிமா சங்கங்கள், சமூக தன்னார்வ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் போன்றவை அவ்வப்போது இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் ஆங்காங்கே முக கவசங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது பொதுமக்கள் அதனைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.