மது
மெல்ல அதன் கோப்பையில்.
உனையூற்றி சிறுகச்சிறுக.
பருகிப்பழகும்.
உனக்கே தெரியாமல்!
பொதுவாக மதுமனதிற்கு.
மகிழ்ச்சி தரும்.
மெதுவாக உனை வீழ்த்தும்.
மது! உன்
கையெழுத்தை கிறுக்கலாக்கும்
தலையெழுத்தையும்தான்!
மது! உன் கால்களை இடரச்செய்யும்
தடம்தெரியாமல் போகத்தான்!
கானல் நீர் தேடி கால்கடுக்கிறாய்
மது
திருப்பங்களைத் தரும்
திரும்பி பார்க்க. திருத்திக் கொள்ள!
மது!
மொத்தமாய் உனை.
குத்தகை எடுத்து.
குத்தாட்டம் போடச் சொல்லும்.
சத்தமே இல்லாது
சாவுக்கு சங்கூதும்!
மதுவால் உறவுகள் புறம் தல்ல.
தரம்தாழ்ந்தி வாழும் நிலை.
மது!
மகுடம் சூட்டும்.
பட்ட மளிக்கும்.
குடிகாரனென்று!
மது!
சில்லரை வியாபாரி! உனைகல்லறை நிரப்பாது.
கண்ணூரங்காது!
மதுவுக்கு மாலை சூட்டிப்பார்க்கிறாய்.
உனையிழக்க.
உன்னவள் பூவிழக்க!
மது!
நரம்புகளில் குறும்பு செய்யும்
வரம்பு கடக்க!
இதயத்தை இரும்பாக்கும்
வாழ்வு துரு பிடிக்க!
கொலை களவு சூது! அனைத்துக்கும் மதுவே தூது!
தென்பெண்ணை அமரன்.
(விழுப்புரம் )
