இண்டர்நேசனல் பேஷன் ஃவேர் அவார்ட்ஸ் நிறுவனம் (IFWA) சார்பில் செய்தியாளர் சந்திப்பு!
சென்னை:இண்டர்நேசனல் பேஷன் ஃவேர் அவார்ட்ஸ் நிறுவனம் (IFWA) சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
சென்னை கோயம்பேடு அருகிலுள்ள உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது.

அப்போது
ஐ.ஃஎப்.டபிள்யூ.ஏ (INTERNATIONAL FASHION WEAR AWARDS) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரித்வான் ராஜா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது :நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாடலிங் துறையில் திறமையானவர்களை கண்டறிந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தமது நிறுவனம் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக அண்மையில் நடைபெற்ற IFWA மிஸ்டர் மற்றும் மிஸ் இந்தியா போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகவும், தகுதியும், திறமையும் உள்ள வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு அடுத்தக்கட்ட போட்டிகளில் பங்கேற்பதற்கான உதவிகளும், தமது நிறுவனம் சார்பில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.






