சென்னை: வண்டலூர் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெ. மாணிக்கராஜ் மற்றும் மா. ஜீவா ஆகியோரின் புதல்வன் மா. ருத்ரேஷ் என்பவர் FIITJEE குளோபல் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் உலக கின்னஸ் சாதனை முயற்சியாக (3*3 Cube), மெகா மின்க்ஸ் கனசதுரம் மற்றும் ஸ்கேட்டிங் செய்துக் கொண்டே இந்தியாவின் மாநிலம் மற்றும் மாநில தலைநகரங்களின் பெயர்களை கூறிக்கொண்டே 4 நிமிடங்களில் தீர்த்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்திற்கு பரிந்துரை செய்யபட்டுள்ளார்.

மேலும் இவர் கடந்த செப்டம்பர் 8, 2022 அன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் சாதனையாளர் அங்கீகாரம் உறுதிசெய்யப்பட்டது.

மேலும் இந்த மாணவர் பாம்பு கனசதுரம்,2×2,3×3,4×4,5×5 கனசதுரம், பிரமின்க்ஸ் கனசதுரம் மற்றும் ஸ்கூப்,2×2,3×3 கண்ணாடி கனசதுரம் மற்றும் பந்து கனசதுரம் உள்ளிட்ட கனசதுரங்களை தீர்த்து சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்த அசாத்திய சிறுவனின் சாதனைகளை இனம்கண்ட தமிழ்நாடு கன சதுர சங்கம் அவரின் சாதனைகளை போற்றும் வகையில் இவரின் பயிற்சியாளர் ஆனந்த அவர்களின் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை அங்கீகார சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
