சென்னை மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 124-வது வார்டு மாமன்ற உறுப்பினர் விமலா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அலுவலக திறப்பு விழா மயிலாப்பூர் கச்சேரி சாலையில் நடைப்பெற்றது..

124 வது (அ)வட்ட செயலாளர்கள் டி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏ.தாஸ் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் மயிலை கிழக்கு பகுதி பொறுப்பாளர் முன்னிலை வகிக்க சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் விமலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தென் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ்.நந்தகுமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பொறுப்புக்குழு உறுப்பினர் எம்.அன்பழகன் மற்றும் வட்ட,பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்…..