அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை யின் அறம் விருதுகள் 2023: இளம் சாதனையாளர் விருதுப்பெற்ற 4 வயது சிறுவன் முஹம்மது யூனூஸ்!
சென்னை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் வழங்கும் விழா ஆழ்வார்பேட்டை நாரத கானா சபாவில் இதன் நிறுவனர் நல்ல மணி அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே. பாக்யராஜ் மற்றும் நகைச்சுவை நடிகர் மதன்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு சமூக சேவகர் விருது, நல்லாசிரியர் விருது,தொழில் முனைவோர் விருது மற்றும் இளம் தொழில் முனைவோர் விருது, சாதனையாளர் விருது மற்றும் இளம் சாதனையாளர் விருது உள்ளிட்ட தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் 4வயது சிறுவன் யா. முஹம்மது யூனூஸ் அவர்களுக்கு சதுரங்கம் மற்றும் கராத்தே போன்றவைகளில் சிறந்து விளங்கி வருவதற்காக இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருது பெறுவதற்கு இவரின் பெற்றோர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
