யூத் மற்றும் ஸ்போர்ட்ஸ் புரொமோஷன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நடத்திய YSPA இளையோர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்( குழு & தடகளம் ) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் கடந்த 06.01.2023 முதல் 08.01.2023 வரை நடைபெற்றது இதில் தமிழக இளையோர் விளையாட்டு மேம்பாட்டு கழகம் ( YSPA ) அணியானது தடகளம், வாலிபால், கேரம்,கபடி, சிலம்பம், ஸ்கேட்டிங், செஸ், பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்டு தமிழக இளையோர் (YSPA) மேம்பாட்டு கழக அணியானது ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது.

இதில் தமிழக அணியின் பயிற்சியாளர்களாக சக்திவேல் , தாயுமானவன், விஜய், புகழேந்தி, கீதா பங்கேற்றனர் என்று தமிழக இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் (YSPA)மாநில செயலாளர் நாகராஜ் அவர்கள் தெரிவித்தார்.