இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பு (ICWO) சார்பில் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கானா பாடல் குறுந்தகடு மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீட்டு விழா!

எழும்பூர்:டிசம்பர் 1ல் உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பு (ICWO) சார்பில் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை கானா பாடல் ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பு (ICWO) இங்கிலாந்தில் உள்ள மெர்க்குரி பீனீக்ஸ் அறக்கட்டளை ஆதரவில்
ஏ.ஆர்.வினோத் ஒளிப்பதிவில்
ஆட்டுத்தொட்டி கமலநாதன்,ஞானசக்தி பாடல் வரிகளில் அப்பிலோ, விநாயகன்,பிரான்சிஸ் ஆகியோரது குரலில் ஜிம்கெல்லி,சரீதா வீடியோ கலை வண்ணத்தில் இசையமைப்பாளர் ஷாஜஹான் இயக்கத்தில் ICWO-வின் செயலாளர் ஏ.ஜெ.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “இளையோர் எய்ட்ஸ் விழிப்புணர்வு சென்னை கானா பாடல்” குறுந்தகடு
மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க வளாகத்தில் நடைபெற்றது.


இளையோர் எய்ட்ஸ் விழிப்புணர்வு சென்னை கானா பாடல்கள் அடங்கிய குறுந்தகடை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குனர் டி.என்.ஹரிஹரன் இ.ஆ.ப வெளியிட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் துணை இயக்குனர் டாக்டர் எம்.ஜானகிராம் மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.கிறிஸ்டி,துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


