மயிலாப்பூர் :
அரிமா சங்கத்தின்
324-A1 மாவட்டத்தின், மண்டலம் 6, வட்டாரம் – 3 குட்பட்ட மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் 32 ஆவது ஆண்டின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு மாவட்ட துணை ஆளுநர் அரிமா எஸ்.வி. மாணிக்கம் அவர்களால்,அரிமா டி.வி. சேவியர் அவர்களின் முன்னிலையில் ஒரு பயனுள்ள சேவை திட்டத்தின் மூலம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், எளிமையாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதிய தலைவராக அரிமா. தியாகராஜனும், செயலாளராக அரிமா.நந்தகுமார பொருளாளராக அரிமா. நாகராஜன் உள்பட பலர் புதிய பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது தற்போது மக்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் கபசுரக் குடிநீர் சுமார் 350 நபர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையான Arsenic album 30 சுமார் 50 பேர்களுக்கும் கபசுர குடிநீர் பாக்கெட் 100 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.
