சென்னை, ஒம்.எம்.ஆர்.தாழம்பூர் பகுதியில் அசைவ பிரியர்களுக்காக நடமாடும் கடல்மீன்கள் வாகனம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க நாள் சலுகையாக ஒரு கிலோ மீன்கள் வாங்கினால் அதே வகை மீன்கள் அரை கிலோ இலவசம் என்று இதன் உரிமையாளர் சாதிக் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இந்த நடமாடும் வாகனம் மூலம் வஞ்சரம்,சங்கரா,பாரை, கொடுவா,ஷீலா,நெத்திலி போன்ற அனைத்து வகையான மீன்கள் மற்றும் இறால்கள், நண்டு போன்றவை விற்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இங்கு விற்கப்படும் கடல் மீன் தினமும் கிடைக்க கூடிய வகையிலும், புதிய மீன்களாகவும், நியாயமான விலையில், தரமானதாக கிடைக்கும் என்றும் கூறினார்.
ஒ.எம்.ஆர், தாழம்பூரை சுற்றியுள்ள பகுதிகள், செம்மஞ்சேரி, சிறுசேரி, டி.எல்.எப் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வீட்டிற்கு வந்தே மீன்கள் டெலிவரி செய்யப்படும்.