காட்டாங்கொளத்தூர்:கல்லூரி தினம் என்பது மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 2025 கல்லூரி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு 2025 மார்ச் 22ஆம் தேதி, சிறப்புமிக்க முனைவர் டி.பி. கணேசன் அரங்கில் நடைபெற்றது.

அழகிய கட்டிடக்கலையால் வடிவமைக்கப்பட்ட இவ்வரங்கம், மாணவர்களின் உற்சாகத்தையும் திறமையையும் வெளிப்படுத்த, சிறந்த களமாக அமைந்தது. விழாவின் வண்ணமயமான சூழல், மாணவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாடு மற்றும் ஆற்றலுக்கு நேரடியாகப் பிரதிபலித்தது.
நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெற்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக திரு. ஆனந்தகிருஷ்ணன் தேவராஜ். தேசியத் தலைவர். NGA பொறியியல் பணியமர்த்தல், விப்ரோ லிமிடெட், பங்கேற்றார். முனைவர் இரவி பச்சமுத்து, தலைவர், இணைவேந்தர் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள், ஆர். ஹரிணி, நிர்வாக அதிகாரி, எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, அவர்கள் தங்கள் அகம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
முனைவர் பி முனைவர் எஸ். விசாலாட்சி. துணை முதல்வர். எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, நிகழ்ச்சியை வரவேற்பு உரையுடன் தொடங்கினார். மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் அவரது வார்த்தைகள், நாளின் நிகழ்வுகளுக்கான அடித்தளமாக அமைந்தன. முனைவர் சிதம்பரராஜன், இயக்குநர் அவர்கள் மனதைத் தெளிவுப்படுத்தும் உரையாற்றினார். தொடர்ந்து, முனைவர் எம். முருகன், முதல்வர், எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, ஆண்டறிக்கையை வழங்கி, மாணவர்களின் கல்விச்சார் சாதனைகள், ஆராய்ச்சி முயற்சிகள், மற்றும் கூடுதல் பாடத்திட்டச் செயல்பாடுகளைப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து, முனைவர் கோமளா ஜேம்ஸ், துறைத்தலைவர். மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் பொறியியல், எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, சிறப்பு விருந்தினரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

திரு. ஆனந்தகிருஷ்ணன் தேவராஜ் தன் ஊக்கமளிக்கும் உரையில், மாணவர்கள் ஒளிமிகுந்த எதிர்காலத்திற்காகப் பாடுபட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும் அவர், இம்மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொள்வது, தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்த விழாவில், கல்வி;சசார் மற்றும் சிறப்புப்பாடச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மட்டும் இல்லாமல், கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பேராசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.

முனைவர் டி. இளங்கோ, துறைத்தலைவர், கட்டிடப் பொறியியல் துறை, எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, அவர்கள் நிகழ்வின் வெற்றிக்குப் பங்களித்த அனைத்துப் பிரமுகர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நன்றியுரையைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வுகளுக்குப் பிறகு, கல்லூரி தினம் ஒரு வண்ணமயமான விழாவாக மாறியது. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். முக்கிய நிகழ்ச்சிகள்:மாணவர்கள் வழங்கிய அழகிய பாரம்பரிய நடன நிகழ்ச்சி, எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, மௌன நாடகம் (Mime) வழியே கருத்துக்களை வெளிப்படுத்திய சுவாரசியமான நிகழ்வு, சிலம்பம் காட்சி – பாரம்பரிய யுத்தக்கலையின் திறமைமிக்க வெளிப்பாடு, நவீனப் பாடல்கள் (Rap) – சிறந்த இசை மற்றும் கவிதை இணைந்த அசத்தலான காட்சி, ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் பிரமிப்பூட்டும் நடனங்கள்
தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களின் அணிவகுப்பு விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. சீரான ஒழுங்குமுறையுடன் நடைபெற்ற அவர்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு மேலும் பிரம்மாண்டத்தைக் கூட்டியது. தேசிய மாணவர் படை மாணவர்களின் ஒற்றுமையையும், அவர்களது அசைக்க முடியாத ஒழுங்குநிலையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்த கல்லூரி தின விழா, அனைவரின் மனதிலும் நீங்கா நினைவுகளை உருவாக்கியது. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடி, இனிய நினைவுகளைப் பெற்றுச் சென்றனர். இந்த பிரமாண்டமான விழா, அவர்களின் சாதனைகளை வியந்து பாராட்டும் ஒரு மிகப்பெரிய தருணமாக அமைந்தது.
2025 கல்லூரி தினம், மாணவர்களின் மாபெரும் வெற்றிக்கதையாகும். எதிர்கால மாணவர்களுக்கும் இது ஒரு மைல்கல் நிகழ்வாக அமைந்து, கல்வியிலும், கலாச்சாரத்திலும் முன்னேற ஊக்கமளிக்கும் நிகழ்வாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.