சென்னை:
சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்,சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரி நூலகத்தில் ரத்ததான முகாம் நடைப்பெற்றது.
தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பதற்கிணங்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் புலத்தலைவர் முனைவர்.திருமகன் மற்றும் துணை முதல்வர் ஜெ.திலிபன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினராக அ.ரவீந்திரன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இதில் லீலா தேவி, பிரபு ,சுகன்யா எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ.சதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 9.00 மணிக்கு தொடங்கிய இம்முகாம் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமில்
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 186 பேர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினார்.
வளரும் இளம் சமுதாயத்தில் தன்னலமற்ற பொறுப்புடன் சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற உயரிய நோக்கில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சிறப்பான முறையில் நடத்தினர்.