பெருமாள்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய சேவை திட்டம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

30 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில்
இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி நடத்திய இம்முகாமில், பொது மருத்துவம், பல் மருத்துவம், தோல் மருத்துவம், இதய செயல்பாட்டை அறியும் பரிசோதனை, மூட்டு சம்பந்தப்பட்ட பரிசோதனை, என பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் மாணவ, மாணவியர்கள்,பேராசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி அலுவலர் ஜி. ராஜ் விநாயக் மற்றும் முதலாம் ஆண்டு தலைவர் ஏ. ராஜீவ் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணி தன்னார்வ தொண்டர்களின் உதவியோடு சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீராம் கல்வி குழுமத்தை சார்ந்த ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீராம் வித்யா மந்திர் , மாணவ மாணவியரும் ஆசிரிய பெருமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.