பிளேஸ்பாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த பிளேஸ்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்த நிகழ்வில் 2025 ஆம் ஆண்டின் Pearl icon of india வின் Miss india 2025 Title winner ஆக தேர்வு செய்யப்பட்ட Miss அம்ருத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு புடவை மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை நலத்திட்ட உதவிகளாக வழங்கினார்.
மேலும் பழங்குடியின மக்களிடையே கலந்துரையாடிய போது அவர் ஏழை, எளிய மக்களுக்கு தான் தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும், மேலும் தன்னால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக பிளேஸ்பாளையம் கிராம பகுதிக்கு வருகை புரிந்த அவருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் இக்கிராம மக்கள் Miss அம்ருத் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இளம் எழுத்தாளர் தமிழ்வாணன் மற்றும் வழக்கறிஞர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.