கோவை:கோல்டன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளில் சமூக பணியாற்றி வரும் சிறந்த சமூக சேவகர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்க்கான நட்சத்திர விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கோவை கோ இந்தியா ஆடிட்டோரியத்தில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட நடிகர் ரமேஷ் கன்னா மற்றும் அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்
மேலும் இவ்விழாவில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த கண்தான உலக சாதனையாளர் அரிமா.டாக்டர்.ஜே.கணேஷ் அவர்களுக்கு 4679 ஜோடி கண்களை தானமாக எடுத்தமைக்காகவும், தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 1271 பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண் தான விழிப்புணர்வு கருத்தரங்குகளை சிறப்புற நடத்தியதை பாராட்டியும், தமிழ் திரைப்பட நடிகர்கள் ரமேஷ் கண்ணா மற்றும் அனுமோகன் ஆகியோர் இணைந்து கண்தான சேவா ரத்னா விருது வழங்கி கௌரவித்தனர்.

மேலும் இவ் விழாவில் தமிழகத்தில் உள்ள சிறந்த சேவையாளர்களையும் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.